Latestமலேசியா

கோவிட்-19 தடுப்பூசியால் மோசமான பக்கவிளைவா? AstraZeneca-விடம் மலேசியா விளக்கம் கோரும்

உலு சிலாங்கூர், மே-3, தனது தயாரிப்பிலான கோவிட்-19 தடுப்பூசிகளால் மோசமான பக்கவிளைவுகள் ஏற்படலாம் என்பதை மூன்றாண்டுகள் கழித்து ஒப்புக் கொண்டுள்ள AstraZeneca நிறுவனத்திடம் இருந்து சுகாதார அமைச்சு விளக்கம் கோரவிருக்கிறது.

அது குறித்து மலேசியா மட்டுமல்லாமல், உலக மக்களுக்கே விரிவான மற்றும் வெளிப்படையான விளக்கத்தை தர வேண்டிய கடப்பாடும் பொறுப்பும் AstraZeneca-வுக்கு உண்டு என சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மாட் கூறினார்.

மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தையும் கலக்கத்தையும் தவிர்க்க அது அவசியம் என்றார் அவர்.

கோவிட் தடுப்பூசி விஷயத்தில் அரசாங்கம் மக்களிடத்தில் எதனையும் மறைக்கவில்லை; தடுப்பூசிகளைத் தருவித்த நிறுவனம் என்ற வகையில் AstraZeneca-வுக்கும் அது பொருந்தும் என டாக்டர் சுல்கிஃப்லி சொன்னார்.

அவ்விவகாரத்தை KKM அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகக் கூறிய அமைச்சர், தடுப்பூசி போட்டவர்களுக்கு ஏற்படும் பக்க விளைவுகளுக்கான சிகிச்சை முறை குறித்த வழிகாட்டி KKM வசம் இருப்பதாகக் கூறினார்.

தனது தயாரிப்பிலான கோவிட் தடுப்பூசிகளால் மிகவும் அரிதாக பக்க விளைவுகள் ஏற்படலாம் என்பதை நீதிமன்ற ஆவணங்களில் AstraZeneca ஒப்புக் கொண்டுள்ள விஷயம், உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Oxford பல்கலைக்கழகத்துடன் இணைந்து அந்நிறுவனம் உருவாக்கியத் தடுப்பூசிகள், டஜன் கணக்கான சம்பவங்களில் மோசமான பக்க விளைவுகளையும் மரணங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கூறி தொடரப்பட்ட வழக்கில் தான், முதன் முறையாக AstraZeneca அந்த உண்மையை ஒப்புக் கொண்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!