பாலிங்,மே 10 – AstraZaneca உட்பட கோவிட் 19 – தடுப்பூசிகளால் பக்க விளைவு ஏற்பட்டது என்பதற்கான ஆதாரம் இருக்குமானால் அதற்கு சிகிச்சையளிக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என சுகாதார அமைச்சர் Datuk Seri Dr Dzulkefly Ahmad தெரிவித்திருக்கிறார்.
பக்க விளைவுகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஏற்பாடுகள் அரசாங்கத்திற்கு இருப்பதாகவும் அவர் கூறினார். கோவிட் 19 – தொற்றின்போது உலகில் போடப்பட்ட தடுப்பூசிகளில் ஒன்றான AstraZenecaவினால் எவருக்காவது பக்க விளைவு ஏற்பட்டதற்கான ஆதாரம் இருப்பது கண்டறியப்பட்டதால் அவர்களுக்கு சிகிச்சைக்கான உதவி வழங்கப்படும் என்பதோடு இதற்கான உத்தரவாதத்தையும் அரசாங்கம் வழங்குவதாக அவர் கூறினார்.
இதனிடையே இந்த விவகாரத்தில் அரசாங்கம் முழு உத்தரவாதத்தை வழங்குவதாக Dzulkefly தெரிவித்தார். Pfizer-BioNTech மற்றும் Sinovac ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு பக்க விளைவுகள் ஏற்பட்டாலும் அதற்கு சிகிச்சை வழங்குவதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும் என Baling மருத்துவமனையின் விரிவாக்க கட்டிடத்தை ஒப்படைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசியபோது Dzulkefly கூறினார். உலகம் முழுமையிலும் கோவிட் 19- தொற்றுக்கான AstraZeneca தடுப்பூசியை மீட்டுக்கொள்வதாக Britain மற்றும் Sweden மருந்து நிறுவனங்கள் இதற்கு முன் தெரிவித்திருந்தன.