
சீனாவில், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் உடனடியாக கோவிட்-19 பெருந் தொற்றுக்கான தடுப்பூசியை போட்டுக் கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. சுழியம் கோவிட்-19 தொற்று கொள்கையிலிருந்து தளர்வு அறிவிக்கப்பட்டதில் இருந்து, சீனா முழுவதும் மீண்டும் கோவிட்-19 தொற்று அதிவேகமாக பரவி வருவதை அடுத்து அந்நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரத்தரப்பினர் வீடு வீடாக சென்று, முதியவர்களை தடுப்பூசி போட்டுக் கொள்ள வலியுறுத்தும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதர உலக நாடுகளை போல, தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையை கைவிட்டு, அதற்கு சிகிச்சை அளிக்கும் நடவடிக்கைகளில் சீன கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. எனினும், அந்த மாற்றம், மருத்துவமனைகளுக்கு படையெடுக்கும் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது.