Latestமலேசியா

கோவிட்-19 : புதிய வகை தொற்றுகளால் உலக மக்களுக்கு அச்சுறுத்தல்

கோவிட்-19 பெருந் தொற்றை கட்டுப்படுத்துவதில் அதீத முன்னேற்றம் காணப்பட்டாலும், மரபணு ரீதியாக மாற்றம் கண்டு வரும் அந்த உயிர்கொல்லி தொற்று இன்னமும் ஒட்டு மொத்த உலக மக்களின் சுகாதாரத்திற்கும், பொருளாதாரத்திற்கும், மருட்டலாகவே விளங்குகிறது.

சில நாடுகளில் மரபணு ரீதியாக மாற்றம் கண்டுள்ள புதிய தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, WHO உலக சுகாதார நிறுவனத்தின் Dr Tedros Adhanom Ghebreyesus கூறியுள்ளதே அதற்கு காரணம்.

குறிப்பாக, கடந்த அக்டோபரில் அடையாளம் காணப்பட்ட XBB.1.5 தொற்று, அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் அதி வேகமாக பரவி வருகிறது. இதுவரை 25 நாடுகளில் அத்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

மலேசியாவில், கடந்தாண்டு டிசம்பர் முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 55.4 விழுகாட்டினர் XBB வகை தொற்றுக்கு இலக்கான வேளை ; எஞ்சியவர்கள் BA.2.75 மற்றும் BQ.1 வகை தொற்றுகளால் பாதிக்கப்பட்டவர்கள் என சுகாதார தலைமை இயக்குனர் நோர் ஹிசாம் அப்துல்லா கூறியுள்ளார்.

அதே சமயம், சீனாவில் தற்சமயம் அதிவேகமாக பரவி வரும் BA.5.2, BF.7 வகை தொற்றுகள் மலேசியாவிலும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

நாட்டில் இதுவரை நான்காயிரத்து 148 பேர் BA.5.2 வகை தொற்றுக்கு இலக்கான வேளை, BF.7 வகை தொற்றை உடப்டுத்திய மூன்று சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!