Latestமலேசியா

கோவிட்-19 பெருந்தொற்று இனி பொது சுகாதார அவசரநிலை அல்ல ; கூறுகிறார் டாக்டர் சாலிஹா

அனைத்துலக நிலையில், கோவிட்-19 பெருந்தொற்று இனி பொது சுகாதார அவசரநிலையாக வகைப்படுத்தப்படாது என சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இம்மாதம் நான்காம் தேதி, சுவிட்சிலாந்து, ஜெனிவாவில் நடைபெற்ற, சர்வதேச சுகாதார விதிமுறைகள் மீதான அவசர கமிட்டி கூட்டத்தில் அது குறித்து முடிவு எடுக்கப்பட்டதாக, சுகாதார அமைச்சர் டாக்டர் சாலிஹா முஸ்தபா தெரிவித்தார்.

கோவிட்-19 பெருந் தொற்றால் ஏற்படும் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் குறைந்துள்ளன. அதோடு, உலக மக்களிடையே அந்நோய்க்கு எதிரான, நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரித்துள்ளதால் அம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டை பொறுத்த வரையில், கடந்த சில வாரமாக, கோவிட்-19 பெருந் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்தாலும், நிலைமை தொடர்ந்து கட்டுப்பாட்டில் இருப்பதையும் டாக்டர் சாலிஹா முஸ்தபா சுட்டிக்காட்டினார்.Covid-19 ,no longer, a public health, emergency, says Dr Zaliha

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!