நியு யோர்க், பிப் 25 – கோவிட் தொற்றினால் உலகம் முழுவதும் குறைந்தது 52 லட்சம் சிறார்கள், பெற்றோர் அல்லது தங்களை பராமரித்த தாத்தாபாட்டி, அல்லது குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளனர். புதிய ஆய்வின் வழி திரட்டப்பட்ட அந்த தகவல், The Lancet மருத்துவ ஆய்விதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறுவயதிலே பெற்றோர் அல்லது பராமரிப்பாளர்களை இழப்பதால், வறுமை மற்றும் மன நலப் பாதிப்பு தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்குமென ஐயுறப்படுகிறது.
எனவே , உலக நாடுகள் தங்களது திட்டங்களில், உறவுகளை இழந்த சிறார்களை கவனத்தில் எடுத்துக் கொள்ளும்படி வலியுறுத்தப்பட்டுள்ளன.