கோலாலம்பூர் , மார்ச் 7 – நாட்டில் நேற்று 55 கோவிட் தொற்று மரணங்கள் பதிவாகின. அதில் 16 மரணங்கள் மருத்துவமனைக்கு வெளியே நிகழ்ந்தவை ஆகும்.
இதனிடையே, கோவிட் தொற்றுக்கு மேலும் 27,435 பேர் ஆளாகியிருப்பதாக சுகாதார அமைச்சு தகவலை வெளியிட்டுள்ளது. நேற்று நள்ளிரவு வரையில் 3லட்சத்து 8,251 பேர் கோவிட் பாதிப்பின் காரணமாக சிகிச்சை பெற்று வருவதோடு அவர்களில் 397 பேர் ICU தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.