Latestமலேசியா

கோவிட் SOP மீறல்; பெருநிறுவனங்களுக்கு 10 லட்சம் ரிங்கிட் வரை அபராதம் விதிக்க பரிந்துரை

கோலாலம்பூர், டிச 13 – பல முறை, கோவிட் SOP- களை மீறும் பெருநிறுவனங்களுக்கு படிப்பினையைத் தர, அபராதத் தொகையை 10 லட்சம் ரிங்கிட் வரை உயர்த்த திட்டமிட்டிருப்பதாக, சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
அதற்காக, 342 -வது சட்டத்தில் திருத்தம் செய்யும் பரிந்துரையை தாம் இவ்வாரம் வியாழக்கிழமை மக்களவைக்கு கொண்டு செல்லவிருப்பதாக அவர் கூறினார்.

நடப்பில் இருக்கும் அச்சட்டத்தின் கீழ், கோவிட் SOP – களை மீறும் தனிநபர் அல்லது நிறுவனங்கள் மீது அதிகபட்சம் 1,000 ரிங்கிட் மட்டுமே விதிக்க முடிவதை அவர் சுட்டிக் காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!