
ஈப்போ டிச, 26 – ஈப்போவில் சிறப்பான முறையில் இயங்கி வரும் கோஸ்மோபோய்ன்ட் கல்லூரி மாணவர்களின் இந்திய கலாச்சார சங்கம் 13 ஆண்டாக வசந்தம் கலை இரவு நிகழ்வு கிந்தா இந்தியர் சங்க மண்டபத்தில் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்தது. கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு அந்தக் கல்லூரியில் தொடங்கப்பட்ட இந்த இயக்கத்தின் வழி பல சமுக சேவைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த முறை இந்த நிகழ்வின் வழி திரட்டப்பட்ட நிதி கண்பார்வையற்றோர்களுக்கும் வசதி குறைந்த மாணவர்களுக்கும் உதவிகள் வழங்கப்பட்டதாக அந்த சங்கத்தின் தோற்றுனர் எம். இளங்குமரன் கூறினார். கோஸ்மோபோயின்ட் கல்லூரியில் கல்வியை மேற்கொண்ட முன்னாள் மாணவர்களை மீண்டும் சங்கமமாகும் நிகழ்வாகவும் அந்த நிகழ்ந்சி அமைந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில், வளர்ந்து வரும் உள்ளூர் இளம் பாடகர் கிரிஷ் படைப்பும் இடம் பெற்றது. அவரை நிகழ்வில் கிந்தா சமுக நல , விளையாட்டு மற்றும் கலாச்சார இயக்கத்தின் தலைவர் பி. யூவராஜன் பாராட்டி கௌரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வு சிறப்புடன் நடைபெறுவதற்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் எஸ். சத்தீஸ் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.