Latestமலேசியா

சகப் பணியாளர் மானபங்கம்; 2 பிள்ளைகளுக்குத் தந்தையான ஆடவர் மீது குற்றச்சாட்டு

தெலுக் இந்தான், ஆகஸ்ட்-23 – சகப் பணியாளரான பெண்ணை மானபங்கம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கையுறைத் தொழிற்சாலை ஊழியரான 35 வயது ஆடவர் இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

எனினும், தெலுக் இந்தான் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொண்டு வரப்பட்ட அக்குற்றச்சாட்டை, ஷாம்சுல் ஷாவால் ஹோஸ்னோன் (Syamsul Syawal Hosnon) மறுத்தார்.

Jalan Changkat Jong-ங்கில் உள்ள கையுறைத் தொழிற்சாலையில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி அக்குற்றத்தைப் புரிந்ததாக, 2 குழந்தைகளுக்குத் தந்தையுமான அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கினார்.

அக்குற்றத்திற்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறையுடன் அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.

3,000 ரிங்கிட் மற்றும் ஒரு நபர் உத்தரவாதத்தின் பேரில் அவரை ஜாமீனில் விடுவித்த நீதிமன்றம்,
பாதிக்கப்பட்ட பெண்ணை வழக்கு முடியும் வரை தொந்தரவு செய்யக் கூடாதென கூடுதல் நிபந்தனையும் விதித்தது.

வழக்கு செப்டம்பர் 30-ல் மறுசெவிமெடுப்புக்கு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!