
நியு யோர்க், ஜன 5 – தமது சகோதரரான பிரிட்டன் இளவரசர் வில்லியம், வாக்குவாதத்தின் போது தம்மை தாக்கியதாக, தம்மை பற்றிய புதிய புத்தகத்தில் இளவரசர் ஹெரி (Harry) திடுக்கிடும் தகவலை வெளியிட்டிருக்கிறார். தமது மனைவி மேகன் (Meghan Markel), கையாள்வதற்கு கடினமானவர், மரியாதைக் குறைந்தவர் என வில்லியம் கூறியதோடு, தமது கழுத்துப்படையைப் பிடித்து, தரையில் தள்ளியதாக , ஹெரி குறிப்பிட்டிருக்கின்றார். இம்மாத இறுதியில் வெளிவரவிருக்கும் தமது ‘Spare’ சுயசரிதையில் , வில்லியமுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு குறித்து ஹெரி எழுதியிருக்கின்றார். மேலும் அந்த புத்தகத்தில், பிரிட்டன் அரச குடும்பத்துடன் ஏற்பட்ட மோதல் குறித்தும் அவர் எழுதியிருப்பதால், அப்புத்தகத்தை வாங்கி படிக்க பலரும் ஆர்வமுடன் இருக்கின்றனர்.