
ஈப்போ, பிப் 27 – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறார்கள் நீச்சல் குளத்தில் மூழ்கி மாண்டனர். 9 வயது சிறுமியும் அவரது இளைய சகோதரரான எட்டு வயது சிறுவனும் நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்ததை ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் Yahaya Hassan உறுதிப்படுத்தினார். நேற்று மாலை மணி 6.10 அளவில் நீச்சல் குத்தில் அவர்கள் மூழ்கிய சம்பவம் குறித்து தங்களுக்கு தெரியவந்ததாக அவர் கூறினார். இதனிடையே இந்த சிறார்களின் மரணத்தில் அலட்சியம் அல்லது கவனக்குறைவு இருந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார். நீச்சல் குளத்தில் குளிக்கச் செல்லும் தங்களது பிள்ளைகளை கவனிப்பதில் பெற்றோர்கள் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும் என யஹ்யாகேட்டுக்கொண்டார்.