கோலாலம்பூர், ஆகஸ்ட் 30 – அண்மையில் 11 வயது மாணவி ஒருவர் பள்ளியில் வகுப்பில் தன் சக நண்பர்களுக்கு 3000 ரிங்கிட்டை அன்பளிப்பாக கொடுத்த சம்பவத்தை தொடர்ந்து, தன் மகளுக்கு அப்பணம் எப்படி கிடைத்தது என்ற உண்மையை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
பள்ளியில் 20,50 மற்றும் 100 ரிங்கிட் நோட்டுகளை தன் நண்பர்களுக்கு வழங்கியிருக்கின்றார். இதனைப் பார்த்த வகுப்பாசிரியர், உடனே அம்மாணவியின் தாயாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தன் மகளை அழைத்து விசாரித்த அவர், பின்னர்தான் அப்பணம் எப்படி கிடைத்ததது என்பதை கண்டறிந்துள்ளார்.
ராயாவுக்கு அம்மாணவி மற்றும் அவரது சகோதரிகளுக்குக் கிடைத்த அங்பாவ் பணத்தை இவர் எடுத்து தன் நண்பர்களை மகிழ்விக்க கொடுத்திருக்கிறார்.
ராயாவின்போது தன் அம்மா தாத்தா பாட்டிக்கு பணம் கொடுத்த போது அவர்கள் மகிழ்ந்ததைப் பார்த்ததால் தானும் அப்படி செய்து தன் நண்பர்களை மகிழ்விக்க நினைத்ததாக கூறியுள்ளார் அம்மாணவி.
தன் மகளின் நோக்கம் நல்லது என்றாலும், அனுமதியின்றி உடன்பிறந்தவர்களின் பணத்தை எடுப்பது தவறு என அந்த தாய் அறிவுறுத்தி, முன்னெச்சரிக்கையாகத் தினமும் மகள் எடுத்தும் செல்லும் பணத்தை சோதிப்பதாகத் பதிவிட்டு இருக்கிறார்.