
கோத்தா திங்கி, மார்ச் 5 – சட்டத்துறை தலைவராக டான்ஸ்ரீ Idrus Harun மீண்டும் நியமிக்கப்பட்டதில் தாம் சம்பந்தப்படவில்லையென டத்தோஸ்ரீ Azalina othman Said தெரிவித்திருக்கிறார். சட்டத்துறை தலைவர் பிரதமருக்கு மட்டுமே பதில் அளிக்க கடமைப்பட்டுள்ளார் என பிரதமர் துறையின் சட்டம் மற்றும் அமைப்புகளின் சீரமைப்புக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சரான Azalina கூறினார். எனவே டான்ஸ்ரீ Idrus Harun மறுநியமனத்தில் எனக்கு தனிப்பட்ட முறையில் தொடர்பு எதுவும் கிடையாது . சட்டத்துறை தலைவரை மீண்டும் ஆறு மாதங்களுக்கு நியமனம் செய்ததற்கு பிரதமருக்கு வேறு காரணம் இருக்கலாம் என அவர் சுட்டிக்காடினார். Idrus Harun இன்னும் சில பணிகளை முடிக்கால் இருக்கலாம் என்ற ரீதியில் அவரது மறுநியமனத்தை நாம் பார்க்க வேண்டும் என அஸாலினா வலியுறுத்தினார்.