
கோலாலம்பூர்,செப் 1 – அரசாங்க தலைமை வழக்கறிஞரான Ahmad Terrirudin
Mohamad Salleh புதிய சட்டத்துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இம்மாதம் 6ஆம் தேதி முதல் அவரது இந்த நியமனம் அமலுக்கு வருகிறது.
டான்ஸ்ரீ Idrus சுக்கு பதில் Ahamd Terrirudin புதிய சட்டத்துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மலாயா பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பட்டதாரியான அவர் 1995ஆம் ஆண்டு நீதி மற்றும் சட்டத்துறையில் இணைந்தார். மலாயா உயர்நீதிமன்றத்தின் மூத்த துணை பதிவதிகாரி, சிபு மாஜிஸ்திரேட், கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி, கூட்டரசு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கான சிறப்பு அதிகாரி ஆகிய பதவிகளில் இருந்த Ahmad Terrirudin 2019ஆம் ஆண்டு மே மாதம் கூட்டரசு நீதிமன்ற தலைமை பதிவதிகாரியாக நியமிக்கப்பட்டார். புதிய சட்டத்துறை தலைவராக Ahmad Terrirudin நியமிக்கப்பட்டதாக அரசாங்க தலைமை செயலாளரான Tan Sri Mohd Zuki Ali வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.