
கோலாலம்பூர், டிச 27- நீதித்துறையின் சுதந்திரத்தை நிலைநாட்டுவதற்காக நடப்பு நீதிபதிகளில் எவரையும் சட்டத்துறை தலைவராக நியமிக்க வேண்டாமென Madpet எனப்படும் மரண தண்டனை மற்றும் சித்ரவதைக்கு எதிரான மனித உரிமை இயக்கத்தின் தலைவரான Charles Hector அரசாங்கத்திற்கு ஆலோசனை தெரிவித்துள்ளார். நீதிபதிகளில் எவரேனும் சட்டத்துறை தலைவராக நியமிக்கப்பட்டால் நீதித்துறை மற்றும் சம்பந்தப்பட்ட நீதிபதிகளின் சுதந்திரம் குறித்தும் கேள்விகள் உருவாகலாம் என அவர் கூறினார். தற்போது நடப்பிலுள்ள நீதிபதிகள் தொடர்ந்து வழக்குகளை நடத்துவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். சட்டத்துறை அலுவலகத்தில் பணியாற்றிவரும் கூட்டரசு முதிர் நிலை வழக்கறிஞர்கள் அல்லது வழக்கறிஞராக பணியாற்றி வருவோர் சட்டத்துறை தலைவராக நியமிக்கப்பட வேண்டும் என்ற ஆலோசனையையும் Charles Hector தெரிவித்தார்.