Latestமலேசியா

சட்டவிரோதமாக தடுத்து வைத்ததற்காக இந்திய நாட்டவருக்கு RM225,000 இழப்பீடு தர உத்தரவு !

கோலாலம்பூர், மார்ச் 9 – நாட்டில் சட்டவிரோதமாக தடுத்து வைத்ததற்காக, இந்திய நாட்டு ஆடவரான A. ஆனந்தகோபிக்கு 2 லட்சத்து 25,000 ரிங்கிட் இழப்பீட்டினை வழங்கும்படி சிரம்பான் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

40 வயதான ஆனந்தகோபி , 2022 -ஆம் ஆண்டு அக்டோபர் 10-ஆம் தேதிலியிலிருந்து அக்டோபர் 22 -ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு தான் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக, போலீஸ் அதிகாரி A. Jeinthan மற்றும் அரசாங்கத்தின் மீது சுமத்திய குற்றச்சாட்டினை வெற்றிகரமாக நிரூபித்திருப்பதாக, நீதிபதி Azizul Azmi Adnan தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

அதையடுத்து, 12 நாட்களுக்கு அவரை தவறுதலாக தடுத்து வைத்ததற்காக, போலீஸ் அதிகாரி A. Jeinthan- னும் அரசாங்கமும், 1 லட்சத்து 80,000 ரிங்கிட்டும் , படிப்பினை இழப்பீடாக 45, 000 ரிங்கிட்டையும் இழப்பீடாக தரும்படி அவர் உத்தரவிட்டார்.

அதோடு, வழக்கிற்கான 30,000 ரிங்கிட் செலவையும் செலுத்தும்படி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்தியா திண்டுக்கல்லைச் சேர்ந்த ஆனந்தகோபி , கோவிட் காலகட்டத்தில் அமல்படுத்த முடக்க நிலையால் மலேசியாவிலிருந்து சொந்த ஊருக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.

அந்த முடக்க நிலையின் காரணமாக, நாட்டில் அனுமதிக்கப்பட்ட கால கட்டத்தையும் தாண்டி கூடுதல் நாட்கள் தங்கியிருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படக் கூடாது என அப்போது அரசாங்கம் உத்தரவை பிறப்பித்திருந்தது.

எனினும், நெகிரி செம்பிலான், ரந்தாவ் ஶ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் நிகழ்ந்த சிலை திருட்டு விசாரணை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அந்த திருட்டு சம்பவத்துடன் அவருக்கு தொடர்பில்லாதது தெரிய வர , நாட்டில் கூடுதல் நாட்கள் தங்கியிருந்ததாக ஆனந்தகோபி மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

தம் மீது கொண்டு வரப்பட்ட அந்த குற்றச்சாட்டை எதிர்த்து ஆனந்தகோபி வழக்கு தொடுத்த நிலையில் , தீர்ப்பு அவருக்கு சாதகமாக அமைந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!