கோலாலம்பூர், பிப் 10 – kelantan, Rantau Panjang கில் வாடகைக்கு எடுக்கப்பட்ட சுற்றுலா பஸ்ஸில் மியன்மாரைச் சேர்ந்த 20 சட்டவிரோத குடியேறிகளை கடத்திச் செல்லும் கும்பலின் வியூகம் முறியடிக்கப்பட்டது. சுமார் 30 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்ற பின் அதிகாலை 12.30 மணியளவில் அந்த பஸ் தடுத்து நிறுத்தப்பட்டதோடு அதிலிருந்த 15 முதல் 30 வயதுடைய அனைத்து சட்டவிரோத குடியேறிகளும் கைது செய்யப்பட்டனர். அந்த சுற்றுலா பஸ்சுடன் ஒரு BMW காரும் உடன் சென்றதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதாக பொது நடவடிக்கை படையின் அதிகாரி Mannadzar Nasib தெரிவித்தார்.
Related Articles
Check Also
Close