Latestமலேசியா

சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயம்: சாலை போக்குவரத்துச் சட்டத்தில் திருத்தம் செய்ய பரிந்துரை

கோலாலம்பூர், ஆகஸ்ட் 16 – சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தய விவகாரத்தைக் கையாள, அரசாங்கம் 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தில் திருத்தம் செய்ய உத்தேசித்துள்ளது. அச்சட்டத் திருத்தப் பரிந்துரையை அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் மக்களவை கூட்டத்தில் முன்வைக்க அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக இரண்டாவது துணை உள்துறை அமைச்சர் டத்தோ ஜோனதன் யாசின் (Jonathan Yasin) தெரிவித்திருக்கின்றார்.

சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயங்களைக் காண வரும் பொது மக்கள் மீதும் நடவடிக்கை எடுப்பது, சட்டவிரோத பந்தயங்களில் பயன்படுத்துவதற்காக மோட்டார் சைக்கிள்களை மாற்றியமைக்கும் பட்டறை உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது போன்ற பரிந்துரைகளும் அதில் அடங்கும்.

சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயங்களை எதிர்கொள்ள, நடப்பிலுள்ள சட்டம் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும். தண்டனைகளும் கடுமையாக்கப்பட வேண்டும் என, அண்மையில் போக்குவரத்து அமைச்சுடன் கலந்துரையாடல் நடத்திய போது உள்துறை அமைச்சு பரிந்துரைத்திருப்பதாக டத்தோ ஜோனதன் கூறினார்.

இன்று மேலவையில் மேலவை உறுப்பினர் N.பாலசுப்ரமணியத்தின் கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் அந்த விளக்கத்தைத் தந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!