
கோலாலம்பூர், செப் 25 – MCMC எனப்படும் மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் ஒரு செய்தி நிறுவனத்திற்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கை தனது சட்ட எல்லைக்குட்பட்டே இருந்தது என்று பாமி பாட்ஷில் தெரிவித்திருக்கிறார். இந்த விவகாரம் குறித்து தனக்கு முழுமையாக விளக்கம் அளிக்கப்படவில்லை. என்றாலும் உண்மை மற்றும் துல்லியமான அறிக்கையுடன் ஊடக மற்றும் பேச்சு சுதந்திரம் ஆகியவற்றுக்கிடையே சமமான அல்லது சீரான நிலை இருப்பது மிகவும் முக்கியம் என தொடர்பு மற்றும் இலக்கயியல் அமைச்சரான பாமி பாட்ஷில் கூறினார்.
தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான ( MCMC) என்ன செய்தாலும் அது சட்டத்தின் எல்லைக்குள் இருக்கும் என்று நான் நம்புகிறேன். உண்மையில், சில சமயங்களில் MCMC யின் அமலாக்க நடவடிக்கைகள், காவல்துறை விசாரணைகள் அல்லது பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களுடன் இணைந்து செயல்படுகின்றன” என்று மலேசிய டிஜிட்டல் எக்ஸ்போ 2023 தொடக்கி வைத்த பின் செய்தியாளர் கூட்டத்தில் பாமி பாட்ஷில் தெரிவித்தார்
கூறினார். ஊடக சுதந்திரம் என்பது அரசாங்கத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று. அதே சமயம், உண்மையாக இருப்பதும் மிக முக்கியம். சில நேரங்களில், செய்திகளைத் தேடுவதில் முழு கவனம் செலுத்தினாலும் அவை உண்மையாக இருப்பது மிக மிக அவசியம் என பாமி பாட்ஷில் கூறினார்.