கோலாலம்பூர், ஏப் 30 – சண்டகானிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் , Kampung Sungai Kapur ரில் இன்று அதிகாலை 12.30 மணியளவில் வீடு ஒன்று தீயில் அழிந்ததைத் தொடர்ந்து 84 வயது மூதாட்டி ஒருவர் கருகி மாண்டார். அந்த மூதாட்டி குடியிருந்த வீட்டின் கதவுக்கு அருகே அவரது உடலை தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள் கண்டுப்பிடித்தனர். அந்த தீ விபத்து குறித்து இன்று அதிகாலை மணி 12.41 அளவில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து 12 தீயணைப்பு வீரர்கள் அங்கு அனுப்பிவைக்கப்பட்டதாக சண்டகான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் Severinjus Sainkui தெரிவித்தார்.
அந்த வீடு தீயில் 100 விழுக்காடு முழுமையாக எரிந்துவிட்டது. தீ விரைவாக அந்த வீடு முழுவதிலும் பரவியதால் அங்கிருந்து அந்த மூதாட்டி வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டதாக கூறப்பட்டது. தீவிபத்து நிகழ்ந்தபோது அந்த வீட்டில் மூதாட்டியின் பிள்ளையும் இரண்டு பேரக்குழந்தைகளும் இருந்துள்ளனர். அதிகாலை மணி 3.17 அளவில் தீ முழுமையாக அனைக்கப்பட்டதாக Severinjus Sainkui கூறினார்.