யாங்கோன், மார்ச் 1 – மியன்மாரின் Sagaing பகுதியில், கிளர்ச்சிக்காரர்களுடனான கடுமையான மோதலின்போது , ராணுவத்தினர் குறைந்தது 85 சிறார்களையும் 10 ஆசிரியர்களையும் இரு நாட்களுக்கு பிணை பிடித்து வைத்திருந்ததாக, Irrawaddy ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
சண்டை நிகழ்ந்த பகுதியிலிருந்து துருப்புகள் பின்வாங்கிய பின்னர், பிணை பிடிக்கப்பட்டவர்கள் அனைவரும் நேற்று விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கிளர்ச்சிக்காரர்களின் தாக்குதலை எதிர்கொள்ள பொது மக்களை மனித கேடயமாக ராணுவம் பயன்படுத்தியதாக கடந்த காலங்களில் ராணுவம் குறை கூறப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.