
புதுடில்லி, ஆக 22 – சந்திரயான் -3 விண்கலம் நாளை புதன்கிழமை 23 ஆம்தேதி இந்திய நேரப்படி மாலை மணி 6,04 அளவில் நிலவில் தரையிறங்கும் என அறிவிக்கபட்டபோதிலும் கடைசி நேரத்தில் தரையிறங்கும் நாள் ஒத்திவைக்கப்படலாம் என இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று முன் தினம் நிலவுக்கு மிக நெருக்கமான சுற்றுப்பாதைக்குள் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இந்த பணித்தான் மிக மிக முக்கியமான பணியாகும். இந்த இறுதிக்கட்ட பணியை சவாலாக ஏற்று முடித்துள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் அடுத்த கட்ட நிறைவுப் பணிக்காக காத்திருக்கின்றனர்.
இதற்கான பணிகள் இன்று மாலை மணி 5.45க்கு தொடங்க உள்ளது. திட்டமிட்ட பணிகள் அனைத்தும் நடைபெற்றால் புதன்கிழமையன்று சந்திரயான் -3 நிலவில் தரையிறங்கும் நிகழ்வு இந்தியாவில் நேரலையாக ஒளிபரப்பப்படும். அதற்கு முன்னதாக லேண்டரை நிலவின் மேற்பரப்புக்கு கொண்டுச் செல்ல வேண்டும். அந்த பணிகளில்தான் தற்போது இஸ்ரோ விஞ்ஞானிகள் இரவும் பகலுமாக ஈடுபட்டுள்ளனர். நிலவில் தரையிறங்கும் சூழல் சாதகமற்றதாக இருந்தால் ஆகஸ்டு 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்க வாய்ப்பு உள்ளதாக இஸ்ரோவின் அகமதாபாத் இயக்குனர் தெரிவித்துள்ளார்.