Latestஇந்தியா

சந்திரயான்-3 வெற்றி ; செப்டம்பர் 2ல் சூரியனை நோக்கி பாய்கிறது இஸ்ரோவின் ஆதித்யா-எல்1 மிஷன்

சந்திரயான்-3 வெற்றி ; செப்டம்பர் 2ல் சூரியனை நோக்கி பாய்கிறது இஸ்ரோவின் ஆதித்யா-எல்1 மிஷன்

புதுடெல்லி, ஆக 27 – சந்திரயான்-3 திட்டத்தின் வாயிலாக வரலாறு படைத்த இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, செப்டம்பர் இரண்டாம் தேதி, கதிரவனை நோக்கி ஆதித்யா-L1 பயணத்தை ஏவவுள்ளதாக அறிவித்துள்ளது.

ஆதித்யா-L1 திட்டம், சூரியனை ஆய்வு செய்யும் பணிகளை மேற்கொள்ளும்.

அதற்காக, ஆதித்யா-L1 திட்டம் முழு தயார் நிலையில் இருப்பதாக, இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தின் இயக்குனர் நிலேஷ் எம் தேசாய் கூறியுள்ளார்.

ஸ்ரீ ஹரிகோட்டாவிலுள்ள, சதீஷ் தவான் மையத்திலிருந்து, PSLV ராக்கெட் மூலம், ஆதித்யா-L1 விண்கலன் பாய்ச்சப்படும்.

பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இலக்கை சென்றடைய, ஆதித்யா-L1 விண்கலத்திற்கு 127 நாட்கள் ஆகுமெனவும் நிலேஷ் தெரிவித்தார்.

சூரியனின் சுற்றுப் பாதையிலிருந்து, அதன் செயல்பாட்டை மிக நெருக்கமாக கண்காணிப்பதோடு, பூமியில் உயிர்கள் வாழ வழி வகுக்கும் சூரியன் மீதான நமது புரிதலையும் ஆதித்யா-L1 விண்கலன் மேம்படுத்தும்.

பல நூற்றாண்டுகளாக, விஞ்ஞானிகளையும், விண்வெளி ஆய்வாளர்களையும் கவர்ந்த தீப்பந்து மீதான ஆராய்ச்சி நடவடிக்கைகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் இந்தியாவின் லட்சிய முயற்சியை ஆதித்யா-L1 பிரதிபலிக்கும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!