Latestஉலகம்

சந்தேகத்திற்குரிய அடையாளம் ‘ தெரியாத பறக்கும் பொருள் காணப்பட்டதால் துருக்கியில் 12 மணி நேரம் விமான சேவைகள் இடைநீக்கம்

காஷியடென், மே 21 – Turkiye- யின் தென் பகுதியில் பயணிகள் விமானத்தின் radar ஒன்றில் UFO எனப்படும் சந்தேகத்திற்குரிய அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் காணப்பட்டதைத் தொடர்ந்து 12 மணி நேரங்களுக்கு விமானப் பயணங்கள் தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டன. நள்ளிரவு வேளையில் விமான நிலையத்திற்கு வந்துகொண்டிருந்த விமனத்தின் radar-ரில் Gaziantep City -யில் 2,743.2 மீட்டர் அல்லது 9,000 அடி உயரத்தில் அடையாளம் தெரியாமல் பறக்கும் பொருள் காணப்பட்டது. சம்பந்தப்பட்ட அந்த விமானத்தின் விமானி விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டு நிலையத்திற்குத் தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து மற்ற விமானங்கள் அனைத்தும் Adana மற்றும் Sanlirufa நகர்களுக்குத் திருப்பி விடும்படி பணிக்கப்பட்டன. குறைந்தது 18 விமானப்பயணங்கள் ரத்துச்செய்யப்பட்டதோடு 12 மணி நேரத்திற்கு பின்னரே விமான சேவைகள் மீண்டும் செயல்படத் தொடங்கின.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!