Latestமலேசியா

சந்தையில் காய்கறி பற்றாக்குறை ; மேலும் 2 மாதங்களுக்கு நீடிக்கும்

கோலாலம்பூர், மார்ச் 16 – சந்தையில் காய்கறி பற்றாக்குறை பிரச்சனை , அடுத்த இரு மாதங்களுக்கு நீடிக்குமென கேமரன் மலை மலாய்க்காரர் காய்கறி தோட்ட சங்கத்தின் தலைவர் Datuk Syed Abd Rahman Syed Abd Rashid தெரிவித்தார்.

அரசாங்கம் , ரமலான் மாதத்தில் காய்கறி கையிருப்பு போதுமான அளவில் இருக்குமென கூறியிருந்தாலும், அந்த பற்றாக்குறை ரமலான் தொடங்கி Aidilfitri – ராயா பெருநாள் வரை தொடருமென அவர் கூறினார்.

மோசமான வானிலையும், ஜோகூரில் ஏற்பட்டிருக்கும் வெள்ளமும் அதற்கு காரணமென அவர் குறிப்பிட்டார் .
அதையடுத்து, ராயா பெருநாள் காலத்தின் போது காய்கறி விலை 20 விழுக்காட்டிலிருந்து 30 விழுக்காடு வரை அதிகரிக்குமென அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!