Latestமலேசியா

அமைச்சர் சிவக்குமார் தலைமையில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கார்த்திகை தீப விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது

பெட்டாலிங் ஜெயா, நவ 27 – ஸ்ரீ முருகன் நிலையத்தின் ஏற்பாட்டில் கார்த்திகை தீப விழா நேற்று மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மனித வள அமைச்சர் வ. சிவக்குமார் மற்றும்  ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டாக்டர் எம். தம்பிராஜா ஆகியோர் கார்த்திகை தீபத்தை ஏற்றி வைத்து விழாவை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தனர். இந்த நிகழ்வில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் திரளாக கலந்துகொண்டனர்.

அர்பணிக்கப்பட்ட தெய்வீக விழாவைக் குறிக்கும் இந்த நிகழ்வு நம் இதயங்களில் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டாக்டர் எம்.தம்பிராஜா குறிப்பிட்டார். அக்னி காத்திகை ஒரு திருவிழா. இந்திய சமூகத்திற்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் கூறினார். இந்த காத்திகை தீப திருவிழா இறைவனின் வெற்றியை நினைவுப்படுத்துகிறது என மனிதவள அமைச்சர் வ.சிவகுமார் தெரிவித்தார். கடமையை செய் பலனை எதிர்பார்க்கதே என்பதுபோல மாணவர்களின் கடமை படிப்பது, தேர்வுக்கு தயாராகுவது, சிறந்த இலக்கை கொண்டு உழைப்பதுதான் நோக்கமாக இருக்க வேண்டும். செய்ய வேண்டியதை செய்தால் அந்த உழைப்புக்கு கிடைக்கும் வெற்றித்தான் சிறந்த தேர்ச்சி என சிவக்குமார் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ முருகன் நிலையத்தின் துணை நிர்வாக இயக்குனர் சுரேன் கந்தா , சைபர் ஜெயா பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர் டான்ஸ்ரீ டாக்டர் பாலன், பைனாரி பல்கலைக்கழகத்தின் தோற்றுவிப்பாளர் டான்ஸ்ரீ ஜோசப் அடைக்கலம், டேலன்ட் கோர்ப் தலைமை செயல்முறை அதிகாரி மேத்தியூஸ் தோமஸ், டத்தோ டாக்டர் புரவியப்பன், டத்தோ டாக்டர் ஏ.டி குமரராஜா , டாக்டர் நகுலேந்திரன் உட்பட பல பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!