Latestமலேசியா

சந்தையில் மருந்து பொருட்கள் பற்றாக்குறை – கைரி ஒப்புதல்

கோலாலம்பூர், ஜூன் 7 – சந்தையில் சில மருந்துப் பொருட்கள் பற்றாக்குறை நிலவுவதை சுகாதார அமைச்சர் Khairy Jamaluddin ஒப்புக் கொண்டார். இது தொடர்பாக இம்மாத தொடக்கத்தில் மருந்து நிறுவனங்கள் சங்கத்துடன் பேச்சு நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். பற்றாக்குறைக்கு உள்ளான மருந்துகளின் பட்டியலை அறிந்துகொள்வதற்காக அந்த சந்திப்பு நடத்தப்பட்டதாக அவர் கூறினார். மலேசிய மருந்து தொழில்துறை சங்கம், மலேசிய மருந்துகள் சங்கம் , மலேசிய மருந்துகள் விநியோக சங்கம் ஆகியவையும் மருந்துகள் பற்றாக்குறை நிலவுவதை ஏற்றுக் கொண்டுள்ளதாக அவர் கூறினார். நோய் எதிர்ப்பு மருந்து, குழந்தைகளுக்கான மருந்துகள் மற்றும் இரும்மல் மருந்து ஆகியவற்றின் விநியோகத்தில் பற்றாக்குறை இருந்து வருவதாக கைரி கூறினார். மருந்துகள் அனுப்பிவைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதமும் பற்றாக்குறைக்கு மற்றொரு காரணம் என்று அவர் விவரித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!