Latestமலேசியா

சந்தையில் வாங்கிய பலகாரத்தை உண்ட ஐவருக்கு நச்சுணவுப் பாதிப்பு; திரங்கானு சுகாதாரத் துறை விசாரிக்கிறது

குவாலா நெருஸ், ஏப்ரல்-30 – மாராங்கில் சந்தையொன்றில் இருந்து வாங்கி வந்த பலகாரங்களை உண்டவர்களில் ஐவருக்கு, நச்சுணவுப் பாதிப்பு ஏற்பட்ட சம்பவத்தை திரங்கானு சுகாதாரத் துறை விசாரித்து வருகிறது.

அச்சம்பவத்திற்கான உண்மைக் காரணத்தைக் கண்டறிய விரிவான விசாரணை அவசியம் என மாநில சுகாதார இயக்குநர் Datuk Dr Kasemani Embong தெரிவித்தார்.

அதன் பிறகே மேல் நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என்றார் அவர்.

தொடக்கக் கட்ட தகவல்களின் படி பாதிக்கப்பட்ட ஐவரில் நால்வர், மேல் சிகிச்சைக்காக சுல்தானா நூர் சஹிரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக Datuk Dr Kasemani கூறினார்.

சந்தையில் இருந்து வாங்கி வந்த ஒரு வகை பலகாரத்தை உண்ட தனது மனைவி மற்றும் பிள்ளைகள் நச்சுணவால் பாதிக்கப்பட்டதாக, ஆடவர் ஒருவர் பகிர்ந்தக் காணொலி நேற்று முதல் சமூக ஊடகங்களில் வைரலானது.

ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த அச்சம்பவத்தில், மனைவியும் 2 பிள்ளைகளும் வாந்தி பேதிக்கு ஆளானதோடு, அவர்களுக்கு வாயில் நுரைத் தள்ளியதாகவும் அவ்வாடவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!