புத்ராஜெயா, பிப் 22- நாட்டின் சந்தையில் 1 கோடியே 80 லட்சம் RTK சுய கோவிட் பரிசோதனை கருவிகள் விற்பனைக்கு உள்ளன. அதையடுத்து தற்போது அதிகம் விற்பனையாகும் அக்கருவிகளின் கையிருப்பு நாட்டின் போதுமான அளவிலே இருப்பதை உள்நாட்டு வாணிப – பயனீட்டாளர் விவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
நாட்டில் சுய கோவிட் பரிசோதனை கருவிகளைத் தயாரிக்க 8 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 7 நாடுகளில் இருந்து அக்கருவிகள் இறக்குமதி செய்யபட்டுள்ளதாக அவ்வமைச்சு குறிப்பிட்டது.
இதனிடையே சந்தையில் அக்கருவிகளின் தட்டுப்பாடு குறித்து இவ்வாண்டு ஜனவரி முதலாம் தேதி தொடங்கி 3 புகார்களை மட்டுமே பெற்றிருப்பதாக அவ்வமைச்சு கூறியுள்ளது.
மேலும், RTK சுய கோவிட் பரிசோதனை கருவிகள் சந்தையில் 4.90 சென்னுக்கும் 19 ரிங்கிட் 90 சென்னுக்கும் இடையில் விற்கப்படுகிறது. 80 விழுக்காடு RTK கருவிகள் தலா பத்து ரிங்கிட்டுக்கும் கீழ் விற்கப்படுகிறது.