
விண்வெளியில் அதிக நிலவுகளை கொண்ட கோள் எனும் பட்டத்தை, கடந்த சில மாதங்களுக்கு முன் சனியிடமிருந்து (Saturn) தட்டிப் பறித்தது ஜூபிட்டர் (வியாழன்).
எனினும், தற்போது சனிக் கோளை சுற்றி வரும் 62 புதிய நிலவுகள் கண்டறியப்பட்டுள்ளதால், சூரிய குடும்பத்திலேயே அதிக நிலவுகளை கொண்ட கோள் எனும் பெயரை மீண்டும் தன்வசமாக்கிக் கொண்டுள்ளது சனி.
விஞ்ஞானிகளின் அந்த கண்டுபிடிப்பால், மொத்தம் 145 நிலவுகளுடன், மீண்டும் அதிக நிலவுகளைக் கொண்ட கோள் எனும் பெருமையை பெற்றுள்ளது சனி.
இதற்கு முன், 92 நிலவுகளுடன் அதிக நிலவுகளைக் கொண்ட கோளாக ஜூபிட்டர் வலம் வந்தது.
புதிய நிலவுகளைக் கண்டறிய, நெப்ட்யூன் மற்றும் யுரேனஸ் கோள்களின் நிலவுகளைக் கண்டறியப் பயன்படுத்தப்பட்ட, ‘shift and stack’ முறையைப் பயன்படுத்தியதாக அறிவியலாளர் கூறியுள்ளனர்.