அலோர் ஸ்டார், செப்டம்பர் -20, கெடா மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ சனூசி நோர் செப்டம்பர் 17-ம் தேதி தொடங்கி ஜப்பானுக்கு அலுவல் பயணம் மேற்கொண்டுள்ளார்.
Kumamato பிரதேசத்தில் நிலத்தடி அணைக்கட்டு நிர்வாகத்தைப் பற்றி தெரிந்துகொள்ளும் பொருட்டு, பேராளர் குழுவுக்கு தலைமையேற்று அவர் அங்கு சென்றுள்ளார்.
அக்கல்விச் சுற்றுலாவில், சனூசியோடு கெடா நீர் வள மேம்பாட்டு வாரியத்தின் முக்கிய அதிகாரிகளும் சென்றுள்ளனர்.
லங்காவி மக்களின் தேவையை 2040-ஆம் ஆண்டு வரை பூர்த்திச் செய்ய, அத்தீவில் நிலத்தடி நீர் ஆதாரத்தைப் பெறும் திட்டமொன்று மேற்கொள்ளப்படவுள்ளது.
2028-ல் லங்காவியில் அத்திட்டம் முழுமைப் பெற்றதும், தென்கிழக்காசிவின் முதல் நிலத்தடி அணைக்கட்டுத் திட்டமாக அது விளங்கிடும்.
இயற்கை வளம், சுற்றுச் சூழல், நிலைத்தமை அமைச்சின் கீழ் அத்திட்டம் வருவதாக, கெடா மந்திரி பெசார் அலுவலகம் விளக்கியது.
கெடா மக்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் இந்நேரத்தில் மந்திரி பெசாரை காணவில்லையே என எழுந்துள்ள பேச்சுகளுக்கு பதிலளிக்கும் வகையில், மேற்கண்ட விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.