சுபாங் ஜெயா, ஏப் 25 – நேற்றிரவு, சுபாங் ஜெயா, சன்வே பிரமிட் ( Sunway Pyaramid ) பேரங்காடிக்கு முன், கார் கவிழ்ந்து தீப்பற்றியதில், ஓட்டுநர் தீயில் கருகி மாண்டார்.
புரோட்டோன் வகை கார் தீப்பற்றி எரிவதைக் கண்டு, பொது மக்களின் அவசர அழைப்பை அடுத்து, சுபாங் ஜெயா தீயணைப்பு மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அச்சம்பத்தில் அந்த கார் முற்றாக தீக்கிரையாகி ஓட்டுநர் பலியானதாக, சிலாங்கூர் போக்குவரத்து விசாரணை –அமலாக்க துறையின் தலைவர் Azman Shariat தெரிவித்தார்.
இவ்வேளையில் ஓட்டுநரின் அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.