
திருவனந்தபுரம் , ஜன 19 -சபரி மலை ஐயப்பன் கோயிலில் தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை புரிந்ததால் இதுவரை இல்லாத அளவுக்கு உண்டியல் வசூல் உச்சம் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 14ஆம்தேதிவரை சபரிமலை ஆலயத்தின் வருமானம் 320 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என ஆலய வாரியத்தின் தலைவர் கே. ஆனந்தகோபன் தெரிவித்தார்.
அதோடு உண்டியலில் போடப்பட்ட நாணயங்களை எண்ணுவதும் ஆலய ஊழியர்களுக்கு சவாலாக இருப்பதாகவும் கூறப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டதால் இந்த ஆண்டு லட்சக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வந்தனர், நடை திறந்த நாள் முதல் கோயிலின் காணிக்கை வசூல் இதற்கு முந்தைய ஆண்டுகளைவிட அதிகமாக இருந்ததாக அறிவிக்கப்பட்டது. அடுத்த சில நாட்களில் வசூல் தொகையின் முழு விவரங்கள் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டது.