
திருவனந்தபுரம் , டிச 27 – நடப்பு மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது முதல் தினமும் ஐயப்பனை தரிசிக்க பக்தர்கள் சபரிமலையில் அனுமதிக்கப்படுகின்றனர். இம்முறை வரலாறு காணாத கூட்டம் சபரி மலையில் அலைமோதுவதோடு ஆலயத்திற்கான வருமானமும் ரூ.223 கோடிக்கு மேலாக உயர்ந்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் ஆனந்த கோபன் தெரிவித்தார். இந்த சீசனின் உச்சக்கட்ட நிகழ்ச்சியான மண்டல பூஜை இன்று நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நேற்று மாலையில் ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு தீயாராதனை நடத்தப்பட்டது.