
சபாக் பெர்ணாம், ஏப்ரல்-2 – சிலாங்கூர், சபாக் பெர்ணாம், கம்போங் பத்து தீகா புலோ செம்பிலானில் பட்டாசு விற்கும் கனோப்பி கூடாரம் இன்று காலை தீப்பிடித்ததில், ஒருவர் படுகாயம் அடைந்தது உட்பட நால்வர் காயமடைந்தனர்.
அதிகாலை 1 மணிக்கு மேல் தகவல் கிடைத்து, 8 பேரடங்கிய தீயணைப்புக் குழு சம்பவ இடம் விரைந்ததாக, சிலாங்கூர் தீயணைப்பு – மீட்புக் படையின் துணைத் தலைவர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
எனினும் அவர்கள் போய் சேருவதற்குள் தீ அணைக்கப்பட்டு விட்டது.
காயமடைந்த நால்வரும் 20 வயது மதிக்கத்தக்க உள்ளூர் இளைஞர்கள் ஆவர்.
ஒருவருக்கு 2 கால்களிலும் வலது கையிலும் படுகாயம் ஏற்பட்ட வேளை, மற்ற மூவரும் சிராய்ப்புக் காயமடைந்திருந்தனர்.
அனைவரும் சிகிச்சைக்காகக் மருத்துவக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டதாக முக்லிஸ் கூறினார்.