Latestமலேசியா

சபாவின் முன்னாள் துணை முதல்வர் ஜோசப் குருப் காலமானார்

கோலாலம்பூர், ஏப் 18 – சபாவின் முன்னாள் துணை முதலமைச்சர் டான்ஸ்ரீ
Joseph Kurup காலமானார். சபா பி.பி.ஆர்.எஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான 80 வயதுடைய Joseph kurup இருதயக் கோளாறு காரணமாக நேற்று இரவு 7 மணியளவில் கோலாலம்பூரில் உள்ள தேசிய இருதய சிகிச்சை மையமான IJN னில் இறந்தார் . கடந்த சில மாதங்களாக அவர் உடல் நிலை சரியில்லாமல் இருந்ததாக பி.பி.ஆர் .எஸ் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் டத்தோ Johnson Tee தெரிவித்தார்.

சபாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான Joseph Kurup , 1985 இல் பெர்ஜாயா அரசாங்கத்தை வீழ்த்திய டான்ஸ்ரீ Joseph Pairin Kitingan தலைமையிலான P.B.S எனப்படும் Party Bersatu Sabah வின் அமைப்பு உறுப்பினர்களில் ஒருவராக திகழ்ந்தார். 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலத் தேர்தலுக்குப் பிறகு, தேசிய முன்னணி அரசாங்கத்தை அரசாங்கத்தை ஆதரித்த பி.பி.ஆர்-எஸ் கட்சித் தலைவர்கள் அடுத்தடுத்து விலகியதால் P.B.S அரசாங்கம் முடிவுக்கு வந்தது. தமது 40 ஆண்டுகால அரசியலில், மாநில மற்றும் மத்திய அளவில் பல்வேறு அமைச்சர் பதவிகளையும் Joseph Kurup வகித்துள்ளார். அவரது மறைவுக்காக சபா முதலமைச்சர் உட்பட பல அரசியல் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!