Latestமலேசியா

சபாவில் அமைச்சரவை மாற்றம் செய்யப்படலாம் புக் மொக்தார் நீக்கப்படலாம்

கோத்தா கினபாலு, ஜன 6 – GRS நிர்வாகத்தை கவிழ்க்கும் முயற்சி தோல்வி கண்டதைத் தொடர்ந்து சபா முதலமைச்சர் Hajiji Noor மாநில அமைச்சரவையில் மாற்றம் செய்யவிருக்கிறார். ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் தொடர்புப்படுத்தப்பட்ட துணை முதலமைச்சர் Bung Moktar Radin மாநில அமைச்சரவையிலிருந்து நீக்கப்படலாம் என கூறப்படுகிறது. மாநில சுற்றுலா மற்றும் பன்பாட்டு அமைச்சர் Jeffry Arifin னுடன் சபா அம்னோ தலைவருமான Bung Mohktar ரும் சபாஅமைச்சரவையிலிருந்து நீக்கப்படுவார்கள் என முதலமைச்சர் Hajiji Nor ருக்கு அணுக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன. சபா பக்காத்தான் ஹராப்பான் சட்டமன்ற உறுப்பினர்கள் சபா அமைச்சரவையில் இடம்பெறலாம் என்றும் கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாக சபா அம்னோவைச் சேர்ந்த ஏழு சட்டமன்ற உறுப்பினர்களுடன் வாரிசான் கட்சியைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் Hajiji Nor ரை சந்தித்துள்ளனர். நேற்று கோத்தா கினபாலு அம்னோ தலைமையகத்தில் சபா அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் சந்தித்ததைத் தொடர்ந்து சபா முதலமைச்சர் Hajiji Nor ரை நீக்குவதற்காக சபா வாரிசான் கட்சிக்கும் அம்னோவுக்குமிடையே ஒத்துழைப்பு ஏற்படும் என்ற ஆருடங்கள் வெளியாகின. Hajiji Nor ருக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக GRS மற்றும் பக்காத்தான் ஹராப்பான் சட்டமன்ற உறுப்பினர்கள் அறிவித்திருந்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!