
கோத்தா பெலுட், நவம்பர் 20 – சபாவில், எருமை மாட்டை மோதிய, தோயோத்தா Hilux ரக நான்கு சக்கர வாகனம் ஒன்று பள்ளத்தில் விழுந்ததில், அதன் ஓட்டுனர் காயமடைந்தார்.
பங்காலான் அபாயிலுள்ள, எண்ணெய் நிலையத்திற்கு அருகிலுள்ள, ஐந்து மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் அவ்வாகனம் விழுந்தது.
இன்று அதிகாலை மணி 4.09 வாக்கில் அச்சம்பவம் தொடர்பில் அவசர அழைப்பு கிடைத்தவுடன், சபா மாநில தீயணைப்பு மீட்புப் படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக, அதன் நடவடிக்கை மைய பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
அவ்விபத்தில், முதுகில் காயமடைந்த 36 வயது ஓட்டுனர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவ அதிகாரிகளிடம் ஒப்படைப்பட்டதையும் அவர் உறுதிப்படுத்தினார்.