Latestமலேசியா

சபாவில் குடியுரிமை தகுதி இல்லாதவர்களுக்கு அந்நிய நாட்டவருக்கான சிறப்பு அட்டை

புத்ராஜெயா, பிப் 10 – சபாவில் நீண்ட காலமாக தங்கிவரும் , அடையாள ஆவணம் இல்லாதவர்களுக்கு , அந்நிய நாட்டவருக்கான சிறப்பு அட்டையை வெளியிட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

எனினும் அந்த சிறப்பு அட்டை, நிரந்தர குடியிருப்புக்கான தகுதியை அல்லது நாட்டின் குடியுரிமைக்கான தகுதியைக் கொண்டிருக்காது என உள்துறை அமைச்சர் Datuk Seri Hamzah Zainuddin தெரிவித்தார் .

சபாவில், குடியுரிமை தகுதியை கொண்டிருக்காத சிலர் 3 அல்லது 4 தலைமுறைகளாக தங்கிவருகின்றனர். அவர்களில் சிலர் தங்களது சொந்த ஊர் எது என்று தெரியாமல் இருக்கின்றனர். எனவே , அவர்கள் மலேசியாவில் தங்கியிருப்பதற்கான அடையாளமாக சிறப்பு அட்டையை வழங்குவது குறித்த பரிந்துரையை சபா மாநில அரசாங்கம் முன் வைத்திருப்பதாக Datuk Seri Hamzah Zainuddin குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!