Latestஉலகம்

Zombie -ஆக மாறும் மான்கள்; லூசியானா மாநிலத்தில் அவசர காலம்

லூசியானா, பிப்ரவரி 20 – அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் மான்கள் ஒரு அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு மடிந்து வரும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதால், வனவிலங்கு அதிகாரிகள் அங்கு அவசர காலத்தை அறிவித்துள்ளனர்.

அங்கு இதுவரை 19 மான்கள் Chronic Wasting Disease (CWD) என்று அழைக்கப்படும் அந்நோய் பாதிப்புக்கு ஆளானது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

அந்நோய் கண்ட விலங்குகளிடம் இருந்து அது மிக எளிதில் பரவுகிறது.

இதையடுத்து அவசர காலத்தை அறிவித்த லூசியானா வனவிலங்குத் துறை, அங்கு கட்டுப்பாட்டுப் பகுதிகளை நிர்ணயித்துள்ளது.

இந்நோய்த் தொற்றினால் உடல்நிலை பாதிக்கப்பட்டு, நடத்தையில் மாற்றங்கள் ஏற்படுவதால் இதனை zombie deer disease என்றும் அழைக்கின்றனர்.

CWD கண்ட விலங்குகள் சோர்வாகவும், மந்த நிலையிலும் இருப்பதே இந்த நோயின் அறிகுறி. மேலும் அதன் வாயில் இருந்து எச்சில் வடிந்து கொண்டே இருக்கும். பாதிக்கப்பட்ட மானின் சளி, சிறுநீர் மூலம் இந்நோய் பிற மான்களுக்குப் பரவுகிறது.

சில விலங்குகள் அளவுக்கதிமாக உடல் மெலிந்து, மிகவும் ஆக்ரோஷமாக நடந்துக் கொள்வதும் உண்டு.

எனினும் இதுவரை இந்நோயால் மனிதர்கள் பாதிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!