
தாவாவ், பிப்ரவரி-17 – சபா, தாவாவில், 10 மாதம் வயிற்றில் சுமந்துப் பெற்றத் தாயை எட்டி உதைத்துள்ளான் மனசாட்சி இல்லாத மகன்.
இதனால் தாயின் தலையில் காயம் ஏற்பட்டதாக தாவாவ் மாவட்ட போலீஸ் தலைவர் ஜாஸ்மின் ஹுசின் கூறினார்.
தனது தந்தையுடன் வாக்குவாத்தில் ஈடுபட்ட 20 வயது அவ்விளைஞன், பின்னர் தாயின் மீது கோபத்தைக் காட்டிய போது அச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தந்தை பின்னர் போலீஸில் புகார் செய்ததை அடுத்து அவ்வாடவன் கைதானான்.
குற்றவியல் சட்டத்தின் கீழ் மேல் விசாரணைக்காக அவன் போலீஸ் நிலையம் கொண்டுச் செல்லப்பட்டான்.