
கோத்தா கினபாலு, ஜன 5 – அவசியத் தேவையேற்பட்டால் சபாவில் முதலமைச்சர் டத்தோஸ்ரீ Hajiji Noor – ருக்கான ஆதரவை நிருபிப்பதற்கு GRS எனப்படும் Gerakan Rakyat Sabah கூட்டணியின் தலைவர்கள் தயாராய் உள்ளனர். இப்போது இருந்துவரும் மாநில அரசாங்கத்தை தொடர்ந்து தலைமையேற்பதற்கு சபா சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பாலோரின் ஆதரவை Hajiji Nor பெற்றுள்ளார் என GRS தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ Masidi Manjun தெரிவித்திருக்கிறார். சபாவில் புதிய மாநில அரசாங்கத்தை அமைப்பதற்கு குறிப்பிட்ட ஒரு கும்பல் ஆதரவை பெற்றுள்ளதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து அவர் இதனைத் தெரிவித்தார்.