
ரானாவ், செப் 2 – சபா , ரானாவ்வில் பள்ளி ஒன்றில் மாணவர்கள் சிலர், மாணவர்கள் கும்பலால் தாக்கப்படும் காணொளி வைரலாகியுள்ளதைத் தொடர்ந்து போலிஸ் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
சம்மந்தப்பட்ட காணொளியில், இடை நிலைப்பள்ளியின் வகுப்பறையில் மாணவர் கும்பல் ஒன்று, சில மாணவர்களை எத்தியும், குத்தியும், அரைந்தும் பகடி வதையில் ஈடுபடும் 5 நிமிட காணொளி ஒன்று வைரலாகியிருந்தது.
இந்த காணொளி வலைத்தளவாசிகள் மத்தியில் பெரும் கண்டனத்தைப் பெற்றுள்ளதோடு, பகடிவதை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து கருத்துரைத்த ரானாவ் போலிஸ் தலைவர் Simiun Lomudin, இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் வதந்திகளை பரப்ப வேண்டாம் எனக் கேட்டும் கொண்டுள்ளார். நேற்று மதியம் 3.26 மணியளவில் எங்களுக்கு இதுகுறித்த புகார் கிடைத்தது, அதனைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.