
சண்டகான், ஜன 26 – சபாவில் , Sandakan னுக்கு அருகே Pulau Nunuyan தீவில் ரோந்து படகு கவிழ்ந்ததில் சிறப்பு பணிக்குழுவின் தலைமையகத்தைச் சேர்ந்த ஏழு ராணுவ வீரர்கள் உயிர் தப்பினர். பெரிய அலை தாக்கியதால் அவர்கள் சென்ற படகு கவிழ்ந்ததாக சபா போலீஸ் ஆணையர் Idris Abdullah தெரிவித்தார். Batu Sapi யிலுள்ள படகு துறைக்கு பெட்ரோல் நிரப்பச் சென்றபோது அந்த Viper 7 ரக படகு கவிழ்ந்தது. பொது நடவடிக்கை படையின் 15ஆவது தளபத்திய பிரிவின் ரோந்து படகை சேர்ந்த மீட்புக் குழுவினரால் காப்பாற்றப்பட்ட அந்த ராணுவ வீரர்கள் சண்டகான் மேரின் படை தலைமையகத்திதிற்கு கொண்டுவரப்பட்டதாக Idris Abdullah தெரிவித்தார்.