கோத்தா கினபாலு, ஏப் 7 – சபாவில் ஜாலான் குனாக் – தவாவ் சாலையில் மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் ஒரு வயதான பெண் மற்றும் இரண்டு ஆடவர்கள் என மூவர் மரணம் அடைந்த வேளையில் இதர ஐவர் காயம் அடைந்தனர்.
புரோட்டான் ஈஸ்வராவில் பயணம் செய்த 74 வயது பெண்மணியும் , 30 வயதுடைய ஆடவரும் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே இறந்ததை சுகாதாரத்துறையின் மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இந்த விபத்தில் நான்கு சக்கர வாகனத்தில் பயணம் செய்த இதர மூவரும், மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் தீயயணைப்புத்துறையின் அவசர மருத்துவ வாகனச் சேவை மூலம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.