Latestமலேசியா

சபாவில் 4 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கக் கோரும் பெர்சத்துவின் முயற்சிக்கு சட்டத்துறை அலுவலகம் எதிர்ப்பு

கோலாலம்பூர், ஆக 30 – மக்களவை சபாநாயகர் Datuk Johari Abdul மற்றும் சபாவைச் சேர்ந்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சீராய்வு மனுவைத் தாக்கல் செய்யும் பெர்சத்து கட்சியின் விண்ணப்பத்திற்கு சட்டத் துறைத் தலைவர் அலுவலகம் (ஏஜிசி) எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நான்கு எம்.பி.க்கள் பதவி வகிக்கும் தொகுதிகள் காலியானதாக ஜோஹாரி அறிவிக்க வேண்டும் எனக் கோரி பெர்சத்து கட்சி சட்ட நடவடிக்கையை எடுத்துள்ளது.

கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் 63வது பிரிவின்படி இந்த முடிவு நீதித்துறை சீராய்வுக்கு பொருத்தமானதாக அல்ல என்பதால் பெர்சத்து கட்சியின் இந்த விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் என்று சட்டத் துறைத் தலைவர் அலுவலகம் சார்பில் ஆஜரான மூத்த கூட்டரசு வழக்கறிஞர் Ahmad Hanir Hambaly உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் 49 வது பிரிவில் கூறப்பட்டுள்ள கட்சித் தாவல் தடைச் சட்டம், அரசியலமைப்பின் 63 வது பிரிவின் காரணமாக நீதித்துறை சீராய்வுக்கு ஏற்றதாக இல்லை என்று அவர் நீதிபதி டத்தோ அமர்ஜித் சிங் முன் சமர்ப்பித்த வாதத் தொகுப்பில் கூறினார்.

நாடாளுமன்றம் அல்லது அதன் எந்தக் குழுவிலும் நடக்கும் எந்தவொரு நடவடிக்கையும் செல்லுபடியாகும் அல்ல அதன் சட்டப்பூர்வ தன்மை குறித்து எந்த நீதிமன்றத்திலும் கேள்வி எழுப்பக் கூடாது என்று 63வது சட்டப்பிரிவு கூறுகிறது என அவர் வாதிட்டார்.

நீதித்துறை சீராய்வுக்கான விண்ணப்பத்தை பெர்சத்து கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ ரொனால்ட் கியாண்டி மற்றும் டத்தோ முகமது சுஹைமி யாஹ்யா ஆகியோர் கட்சியின் பொறுப்பாளர்கள் என்ற முறையில் கடந்த ஏப்ரல் 17 அன்று தாக்கல் செய்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!