
கோத்தா கினபாலு, ஜன 7 – சபா, Ranau வில் Kundasang கில் சிறிய அளவில் நிலச் சரிவு ஏற்பட்டதில் ஒரு வீடு பாதிக்கப்பட்டது. எனினும் அந்த சம்பவத்தில் எவரும் காயம் அடையவில்லை. நேற்று மாலை மணி 6.10 அளவில் Kampung Dumpring என்னுமிடத்தில் அந்த நிலச்சரிவு ஏற்பட்டதாக சபா தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைக்கு தகவல் கிடைத்தது. ஒரு வீட்டிற்கு பின்புறப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவினால் அந்த வீட்டிற்கு சிறிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதாக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் பேச்சாளர் தெரிவித்தார்.