
நள்ளிரவு மணி 12.28 வாக்கில், அந்த தீ விபத்து குறித்து அவசர அழைப்பு விடுக்கப்பட்டதாக, லிண்டாஸ் தீயணைப்பு மீட்பு நிலையத்தின் தலைவர் அகுஸ்தாவியா ஜோ குவாசி தெரிவித்தார்.
பக்கி ஹவுஸ் கட்டடம் தீயில் 80 விழுக்காடு சேதமடைந்த வேளை ; 60 பக்கி வாகனங்களுடன், கோல்ப் சாதனங்களும் தீக்கிரையானதாக அவர் சொன்னார்.
பின்னிரவு மணி 1.15 வாக்கில் தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
எனினும், அச்சம்பவத்தில் உயிருடற் சேதம் எதுவும் ஏற்படவில்லை. தீக்கான காரணமும், மொத்த இழப்பும் ஆராயப்பட்டு வருகிறது.