Latestமலேசியா

சபா சட்டமன்றத்தில் புங் மொக்தார் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தார்

சபா சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் இன்று கூடியபோது தேசிய முன்னணி உறுப்பினர்களில் பெரும்பாலோர் எதிர்க்கட்சி வரிசையில் அமரும் வகையில் அதன் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டன. சபா தேசிய முன்னணி மற்றும் அம்னோவின் தலைவர் புங் மொக்கதார் ரடின் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தார்.

அம்னோவின் 5 சட்டமன்ற உறுப்பினர்களை தவிர இதர சட்டமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. KDM, வாரிசான் கட்சி ஆகிய சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தனர். அம்னோ பேராளர் மாநாடு நடைபெறவிருப்பதால் அம்னோவின் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் கோலாலம்பூருக்கு சென்றுவிட்டதாக புங் மொக்தார் தெரிவித்தார்.

முதமைச்சர் Hajiji Noor – ரை பதவியிலிருந்து வெளியேற்றும் முயற்சியில் தோல்வி கண்ட புங் மொக்தார் இன்னமும் மாநில துணை முதலமைச்சராக இருந்து வருகிறார். அதே வேளையில் Hajiji Noor ரை பதவி நீக்கும் முயற்சிக்கு ஆதரவு தெரிவிக்காத அம்னோவின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து அரசாங்க சட்டமன்ற உறுப்பினர்களின் வரிசையில் அமர்ந்திருந்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!